பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தந்தையார் ♦ 9


ஆண்டவன் சிரிக்கிறான். அதைச் சொன்னபொழுது டாக்டர் ஆர்.எஸ். முற்றிலும் மனம் மாறியவராகக் கண்களில் கண்ணீர் மல்கப் ‘பெரியவரே’ என்றார். பிறகு அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது டாக்டர் தியாகராஜன் தந்தையார் அவர்கள், “பெரியபுராணத்தில் பெரிய நிபுணர்” என்று சொன்னவுடன் “நாளை வருகிறேன்” என்று சொல்லிச் சென்றார். மறுநாள் முதல் பக்கத்திலுள்ள நோயாளியைப் பார்ப்பார், தந்தையாரைப் பார்க்க மாட்டார்; போய்விடுவார். பிறகு மத்தியானம் உணவுப் பெட்டியுடன் தந்தையார் அருகில் அமர்ந்துகொண்டு ஸ்டாஃப் நர்ஸையே பரிமாறச் சொல்லி, தந்தையாரிடம் பெரியபுராணத்தில் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே உணவு உண்பார். இது ஏறத்தாழ மூன்று மாதங்கள், ஞாயிற்றுக் கிழமை தவிர, எல்லா நாட்களிலும் ஒழுங்காக நடைபெற்று வந்தது. தந்தையாரிடத்தில் மிக மிக ஈடுபாடு கொண்டவராகப் பெரியபுராணத்தைத் தினமும் அவரிடம் கேட்பவராக மாறிவிட்டார், டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் அவர்கள். இது ஒரு நிகழ்ச்சி.

அடுத்து 1959 ஜனவரியில் “இனி மருத்துவமனையில் இருப்பதில் பயனில்லை” என்று டாக்டர் ஆர்.எஸ். சொல்ல, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டோம். மார்ச் 1-ம் தேதி டாக்டர் குருசாமி முதலியார் அவர்களைப் பார்த்துக் கேட்கவேண்டும் என்று டாக்டர் தியாகராஜன் விரும்பினார். எனவே, டாக்டர் குருசாமி முதலியார் அவர்களைக்கான அவர் வீட்டிற்கு விடியற்காலை 6 மணிக்குச் சென்றோம். அப்பொழுதெல்லாம் நம்பிக்கை என்னவென்றால், முதலியார் அவர்கள் சிவபூஜை முடித்துவிட்டுக் கதவைத் திறந்து வெளிவரும் பொழுது முதலில் யார் இருக்கின்றார்களோ அவர்களுக்கு ரொம்ப நன்மை என்று பலர் சொல்லக்