பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 193



இரண்டு நாட்கள் கழித்துக் கொழும்பிற்குச் சென்றேன். அங்கு ஐந்து நாட்கள் பேச ஏற்றுக்கொண்டிருந்தேன். முதல் நாள் போய் இறங்கியவுடன் வழக்கம்போல் சர். கந்தையா வைத்தியநாதன் உட்படப் பலர் விமானநிலையம் வந்திருந்தனர். அன்று மதியம் செய்தி விளம்பரத்துறைச் செயலாளர் வீட்டில் மதிய உணவிற்கு ஏற்பாடாகி இருந்தது. சாப்பிடுவதற்கு முன் அவர் ஆடிவேல் விழாவைச் சினிமா எடுத்திருக்கிறோம் பார்க்கிறீர்களா? என்று கேட்டார். நான் சரியென்றவுடன் ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு, 14mm புரஜெக்டர் (projector) கருவி வைத்து, மூன்று நாட்கள் முன்னர் நடந்த ஆடிவேல் விழாவில் எடுத்த படத்தைப் போட்டார்கள். சில நிமிடங்கள் கழிந்தவுடன் என் மூச்சே நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீகாந்தா உட்பட எங்கள் மூவரிடம் ஒருமணி நேரம் காட்சி தந்த யோகசுவாமிகள் அதே நேரத்தில் கதிர்காமத்தில் ஒலிவாங்கியின் முன்னர்ப் பேசுவதை அந்தச் செய்திப் படம் காட்டிற்று.

அதிர்ந்துபோன நான் செயலாள நண்பரைப் பார்த்து, “இது என்ன பழைய படம், இதைப் போட்டுக் காட்டினீர்களே” என்றேன். அதை மறுத்த அவர் முந்தா நாள் எடுத்ததுதான் இது என்பதற்கு அத்தாட்சியாக அந்தப் படச்சுருளை வைக்கும் தகர டப்பாவின்மேல் எழுதியிருந்ததைக் காட்டினார். எப்பொழுது எடுக்கப் பட்டது, எந்த மணியிலிருந்து எதுவரை என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.

பொறுமை இழந்த நான் உடனே தொலைபேசி மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீகாந்தாவுடன் தொடர்பு கொண்டேன். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும் ஸ்ரீகாந்தா நம்ப மறுத்துவிட்டார். “அ.ச. ஐயா! நாம் மூன்றுபேரும் சுவாமிகளிடம் ஒரு மணிநேரம் இருந்ததையும் அவர்