பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 207


பேசத் தேவையில்லை. ஒரு முறை யாழ்ப்பாணம் சென்று சுவாமிகளைத் தரிசித்தபொழுது சிரித்துக்கொண்டே ‘மகனே சிவனடி பாதம் போய் வரலாமோ’ என்று கேட்டார். நான் கொஞ்சம் அஞ்சினேன். மலையின் மேலிருக்கும் அந்த இடத்திற்குச் செல்வதற்குச் சரியான பாதையொன்றும் அப்பொழுது இல்லை. பாறைகளைக் கடந்து தாண்டிக்கொண்டு செல்லவேண்டும். சுவாமிகளோ முதிர்ந்த பருவத்தினர். என்ன செய்வது என்று திகைத்து இறுதியில் ஒப்புக் கொண்டேன். அந்த மலையின்மேல் ஏறிச் செல்வதானால் போகவரவே பல மணிகள் ஆகும். வழியில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இராது. எனவே, சுவாமிகள் குறித்த நாளில் ஒரு சட்டி நிறைய இடியப்பமும் சொதியும் தயார் செய்து காரின் பின்புறம் வைத்துவிட்டுச் சுவாமிகளும் நானும் மலையடிவாரம் போய்ச் சேர்ந்தோம். அங்கே காரிலிருந்து இறக்கிய இரண்டு பாத்திரங்களையும் பார்த்து ‘என்ன மகனே இது’ என்று கேட்டார்கள். மதிய உணவிற்காக என்று நான் கூறியவுடன் கடகடவென்று சிரித்த சுவாமிகள் ‘போகும் வழியில் பாதி தூரத்தில் அழகான டீக் கடை இருக்கிறது. வேண்டுமான பண்டங்களை வாங்கிச் சாப்பிடலாம்; டீ குடிக்கலாம்’ என்றார்கள். எனக்குத் தலை சுற்றியது. ஒரு மாதம் முழுவதும் ஏதோ இரண்டொருவர் தவிர வேறு யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. அந்த வழியில் யாரை நம்பி எந்தப் பைத்தியக்காரன் டீக் கடை வைத்திருப்பான் என்று நான் நினைத்தாலும் சுவாமிகளிடம் எடுத்துச்சொல்லும் துணிவு எனக்கு இல்லை. ஆனாலும் சுவாமிகள் நான் கொண்டுவந்த உணவை வண்டியிலேயே வைத்துவிடுமாறு பணித்தார்கள். வேறு வழியில்லாமல் அரைமனத்துடன் வண்டியிலேயே உணவை வைத்துவிட்டு இருவரும் மலையேறினோம். பாதி வழி சென்றதும் ஓர் அதிசயக் காட்சி, என்னென்று சொல்வது! பாண், ரொட்டி, பலகாரங்கள் இவை அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும் ஒரு டீக் கடை அங்கே