பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தந்தையார் ♦ 11


முன்னேற்றமடைந்திருந்தார்கள் என்பதைத் தந்தையார் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் நேரடியாகக் காணும் ஒரு வாய்ப்பு எனக்கு இருந்தது.

தந்தையார் நீண்ட காலம் சிவபூசை செய்தவர். 1959 மார்ச் மாதத்தில் முன்னரே டாக்டர். குருசாமி முதலியாரிடம் போய் வந்த விஷயம் பார்த்தோமல்லவா? 1959 சஷ்டி, கிருத்திகை இரண்டும் சேர்ந்த நாள், மார்ச் 15ஆம் தேதி 2 நாட்களாகக் கோமாவில் இருந்தார் தந்தையார். டாக்டர் தியாகராஜன் எங்கள் ஊர்க்காரர். அவர்தான் உடனிருந்து மருத்துவம் செய்து கொண்டிருந்தார். அவரும் கூட இருக்கும்போது “எனக்கு ஒரு வருத்தம்” என்றேன். தியாகராஜன் “என்ன வருத்தம்” என்று கேட்டார். நான், “இறப்பது என்பது சரி. அது யாரும் தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் 50 ஆண்டுகள் சிவபூசை செய்த ஒருவர், எப்படிக் கோமாவில் இறப்பது” என்றேன். அவர் “இது ஆண்டவன் கட்டனை நீயும் நானும் வருந்துவதற்கு ஒன்றுமில்லை” என்று கூறினார். கோமாவில் இருந்த அவரைச் சுற்றி என் மனைவி, தாயார், தங்கை, என் பிள்ளைகள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஐந்து நிமிஷங்கள் கழித்துப் பெரியதாக இருமினார். உடனே என் தாயாரைப் பார்த்து, “இன்று சஷ்டி, கிருத்திகை, ஏன் இன்னும் குளிக்காமல் இருக்கிறாய்? போ” என்றார்கள். தங்கையையும் என்னையும் விரட்டினார். என் மனைவியைத் தன் பக்கத்தில் உட்காருமாறு செய்து, அவள் கைமேல் தமது கைகளை வைத்து மூடினார். அவ்வாறு அவர் செய்தது அந்தக் கைகளில் சிவலிங்கம் இருப்பதான மானசீக பாவனையை உணர்த்தியது. திடீரென்று சிவபூசை செய்ய ஆரம்பித்துவிட்டார். “ஈசான மூர்த்தாய நம” என்று தொடங்கி, உரத்த குரலில் வழக்கமாக அவர் செய்கின்ற சிவபூசை முறை அனைத்தையும் செய்துமுடித்தார். படுத்தபடியேதான் எல்லாம். அதில் ஒரு சிறப்பு