பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


26. காஞ்சி மகாப்பெரியவர்


காஞ்சி சங்கர மடம் தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ பேர் அதன் தலைவர்களாக இருந்து போயினர். கணக்களவில் அவர்கள் இருந்தார்களே தவிரத் தனிப்பட்ட முறையில் எடுத்துச் சிறப்பிக்கப்படும் தன்மை ஒருவரிடம்மட்டுமே இருந்தது. சாதாரண இளைஞனாக இம்மடத்திற்கு வந்தார்; தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் அதன் தலைவராக இருந்தார். இந்த மடாலயத்தைப் பெரிதாக வளர்த்தார். இவை அனைத்தும் ஏனையோரும் செய்திருக்கக் கூடிய செயல்களே ஆகும். மாபெரும் கல்வியாளராய், எல்லாக் கலைகளிலும் வல்லவராய், நினைவாற்றல் பெற்றவராய், ‘தேவனாம் பிரிய’ என்ற வேதச் சொல்லிற்கு புதிய விளக்கம் தரக்கூடிய ஒருவராய் இம்மகான் இருந்தார். ஆனால், இவையெல்லாம்கூட இவரைப் போலவே ஒரு சிலர் செய்திருக்கக்கூடும்.

ஏனைய மடாதிபதிகள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு மகாப்பெரியவருக்கு இருந்தது. ஸ்ரீ சந்திரசேகரர் என்ற பெயருக்குள் பலரும் காணமுடியாமல் மிகமிகச் சிலரே காணக்கூடிய முறையில் ஒரு சந்திரசேகரர் வளர்ந்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல உள்ளே இருந்த சந்திரசேகரர் வளர்ந்து வளர்ந்து வானை முட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். ஆயிரக் கணக்கானவர்கள் அன்றாடம் வந்து மகாப்பெரியவரிடம் ஆசி பெற்றுச் சென்றனர். அந்த ஆயிரத்துள் ஒருவராவது இந்த மகா பெரியவரினுள்ளே ஒரு மகாமகாப்பெரியவர் வளர்ந்துள்ளார்; வானைமுட்டும் அளவுக்கு வளர்ந்த அவரிடம் ஆசிபெறவேண்டும் என்று