பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காஞ்சி மகாப்பெரியவர் ♦ 217


சுவாமிகள் அவர்களிடம் கொடுக்கச் சென்றோம். இம்முறை திரு. நடராச ஐயரும் கூட வந்தார். அவருடன் நாங்கள் மூவரும் சென்று பெரியவருக்கு வணக்கம் செலுத்திப் புத்தகத்தைக் கொடுத்தோம். பாலப்பெரியவரை அங்குக் காணவில்லை. பெரியவரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபொழுது எங்கோ சென்றிருந்த பாலப்பெரியவர் எதிர்ப்பட்டார். திடீரென்று என் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். படம் எடுப்பவரிடம் ‘எங்களை ஒரு படம் எடு’ என்று ஆணையிட்டார். கையிலிருந்த பெரியபுராணப் பிரதியை அவரிடம் கொடுக்கும் பாவனையில் படம் எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் என் காதருகில் வந்து, பாலப்பெரியவர் சொல்லியது, பெரு வியப்பையும் பெரிய ஆனந்தத்தையும் எனக்குத் தந்தது. அவர் கூறியதாவது “அ.ச. நீங்க மகாப்பெரியவாளிடம் ஆசி வாங்க வந்தபொழுது நானும் இருந்தேன். அந்த ஆசியின் விளக்கம் தெரியுமா?” என்றார். மிக்க பணிவுடன் “சுவாமி எனக்கு அதன் தத்துவம் தெரியாது. சால்வையை மகாப்பெரியவாளின் உடல்மேல் போர்த்தி பிறகு அதை எடுத்து எனக்குப் போர்த்தினார்கள் என்ற அளவில்தான் எனக்குத் தெரியுமே தவிர, இதன் இரகசியம் என்ன என்று தெரியாது” என்று கூறினேன்.

பாலப்பெரியவர், “அ.ச. இதற்குப் பெயர் பூரண ஆசிர்வாதம். இதற்குமேல் அவர்கள் தரக்கூடியது எதுவுமில்லை. அப்படியொரு முழு ஆசியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார். அது ஏன் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்று கூறினார்.

பிறகு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊர் திரும்பிவிட்டோம். அந்த மகானின் பூரண ஆசி இன்றுவரை என்னைக் காத்துநிற்பதோடு, இரண்டாயிரம் பக்கங்களில் திருவாசகத்திற்கு உரை எழுதும் ஒரு வாய்ப்பையும் தந்தது. இந்த எட்டு ஆண்டுகளாக எவ்விதப்