பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக என் வாழ்க்கை நடைபெற, நல்ல செயல்களில் ஈடுபட, இன்றுவரை தோன்றாத் துணையாய் இருப்பது அந்த மகானுடைய ஆசியும்தான் என்பதை உணர்கின்றேன்.


27. அன்றைய சொற்பொழிவாளர்கள்


மிக இளமையிலேயே சொற்பொழிவு செய்யும் பழக்கம் இருந்ததாலும், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளருள் ஒருவராக என் தந்தையார் விளங்கியதாலும், அவரைச் சொற்பொழிவிற்கு அழைக்கும்பொழுதெல்லாம் என்னையும் உடன் அழைத்தார்கள். அதன் பயனாகவே, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. போன்றவர்களின் ஆசியைப் பெறமுடிந்தது. அதுமட்டுமல்லாமல், ’கடல்மடை’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற மாரா. குமாரசுவாமி பிள்ளை, எ.சி.பால் நடார் போன்ற பெருமக்களின் தொடர்பு மிக இளமையிலேயே எனக்குக் கிடைத்தது.

அன்றைய சக பேச்சாளர்கள்

அ. சீனிவாசராகவன்: கம்பன் மேடை காரணமாக நெருங்கிப் பழகியவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் ஆவார். ஆங்கிலப் பேராசிரியராகிய இவர் கம்பனிலும் ஒப்பற்ற புலமை பெற்றிருந்தார். மில்டனில் ஈடுபடுவதைப்போலவே கம்பனிலும் ஈடுபடக் கூடியவர். நல்ல கவிஞரும்கூட மிக எளிய நடையில் மிகச் சிறந்த கருத்துக்களை கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு பேசக்கூடியவர் பேராசிரியர் இராகவன் ஆவார்.

திரு. ராபி. சேதுப்பிள்ளை: அந்நாளில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் என்று கருதப்பட்டவர்களுள் ஒருவராவர். எதுகை மோனைகளுடன் பேசவும் எழுதவும் ஆற்றல்