பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230 ♦ நான் கண்ட பெரியவர்கள்


எழுதியுள்ள நூல்களின் மூலமும் நன்கு அறியலாம். இவரே வே. இறையன்பு அவர்கள்.

காவல் துறையில் கூடுதல் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஒருவர் பழந் தமிழ் இலக்கியங்களில் புகுந்து புறப்படுவதுடன் மந்திர சாத்திரங்களையும், இன்றைய மேனாட்டு இலக்கியங்களையும் நன்கு பயின்றுள்ளார். நூலெழுதும் ஆற்றலோடு, சிறந்த முறையில் பேசும் ஆற்றலையும் பெற்ற இவர்தான், இரவி ஆறுமுகம் அவர்கள்.

அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தாலும் கம்பனிலும் சேக்கிழாரிலும் தக்க ஈடுபாடுகொண்டு மிகச்சீரிய முறையில் சொற்பெருக்காற்றி, இவர் இலக்கியத்துறைக்கு வந்திருந்தால் பெரும் பயன் விளைந்திருக்குமே என்று பிறர் எண்ணும் வண்ணம் பணியாற்றி வருபவர் குமரி அனந்தன் அவர்கள்.

எந்தத் தலைப்பைத் தந்தாலும் அத்துறையில் பலகாலம் ஈடுபட்டவரையும் வெல்லும் வகையில் பேசக்கூடியவரும் அரசியலில் மாட்டிக் கொண்டவரும் ஆகிய இவரே தமிழருவி மணியன் அவர்கள்.

ஆங்கிலப் பேராசிரியராய்ப் பணிதொடங்கி கல்லூரி முதல்வராகப் பணியாற்றும் இவர், தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டிலும் நன்கு பேசும் ஆற்றல் மிக்கவர். சமய இலக்கியங்களிலும் நன்கு ஈடுபட்டு மிகச்சிறந்த முறையில் பேசும் இவரே திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

கல்வியோ மருத்துவக் கல்வி; தொழிலோ மருத்துவர் தொழில். இதனிடையே கம்பனையும் சேக்கிழாரையும் படிக்க நேரமேது? ஆனால், இந்த இருவர் பற்றி இவர் பேசத்தொடங்கினால் இதிலேயே மூழ்கித் திளைத்தவரோ