பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238 ♦ நான் கண்ட பெரியவர்கள்



நிலைய இயக்குநர் முனைவர் வி.கே. நாராயணமேனன் அவர்களிடம் சென்று, நடந்ததைச் சங்கரன் கூறியவுடன் அவரும் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து காலையில் ஆங்கிலச் செய்தி முடிந்தவுடன் திரு. பிள்ளையவர்கள் வாசிப்பதாக ஏற்பாடு செய்து, அவருக்கும் செய்தி அனுப்பிவிட்டோம்.

இந்த நிலையில்தான் இறைவன் திருவருள் பரிபூரணமாக, எங்கள் பக்கம் திரும்பியது. இராயப்பேட்டை பஜார் ரோட்டில் ஒரு வீட்டில் குடியிருந்தேன் நான். காலை ஆறரை அல்லது ஏழு மணியிருக்கும். வானொலி நிலையத்தின் காவலர்களில் ஒருவராகிய படைவேட்டன் என்பவர் சைக்கிளில் வெகுவேகமாக வீட்டிற்கு வந்து “ஐயா இராஜரத்தினம் பிள்ளை ஸ்டுடியோவிற்கு வந்திட்டாரு. முதல்ல உங்களைத்தான் எங்கேண்ணு கேட்டாரு. நிலைமையைப் புரிந்துகொண்ட நான் ‘சிக்கிரமாக வந்திடுவீங்க’ என்று சொல்லிவிட்டு ஓடிவந்தேன்” என்றான். அவனையே நிலைய இயக்குநரிடம் தகவல் சொல்லச் சொல்லிவிட்டுப் பத்து நிமிடங்களுக்குள் நானும் வானொலி நிலையம் சென்றேன். டாக்டர் மேனனும் அதே நேரத்தில் வந்துவிட்டார். அங்கே ஒர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்நாட்களில் இப்பொழுது உள்ளதுபோல வானொலிக்குப் பெரிய கட்டடம் எதுவும் இல்லை. இப்பொழுதுள்ள கட்டடத்திற்குப் பின்பகுதியிலுள்ள நான்கு அறைகள், அதற்குமேல் நான்கு அறைகள் என்பவைதான் இருந்தன. நாங்கள் போகின்ற நேரத்தில் ஸ்டுடியோவிற்குள் போகாமல் வராந்தாவில் அமர்ந்து பிள்ளையவர்கள் அற்புதமாக வாசித்துக்கொண்டிருந்தார். அவருடைய மனநிலையை நாங்கள் கெடுக்க விரும்பவில்லை. இயக்குநர் மேனன் இசைக்கலையிலும் வல்லவர், நாங்கள் இருவரும் கூடிப்பேசி, இந்தத் திறந்த வெளியிலிருந்தே பிள்ளையவர்களின் இசையமுதத்தை ஒலிபரப்புவது என்று முடிவுசெய்தோம். பொறியாளர்கள் அதற்குரிய பணிகளை