பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்காத நினைவுகள்- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ♦ 245


எதுவும் நடைபெறப்போவதில்லை என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தோம்.

ஒரு இருபதுநாட்கள் கழித்து நிலைய இயக்குநருக்கு ஒரு இரகசியத் தபால் வந்தது. அதைப் படித்ததும் நாங்கள் மூவரும் அதிர்ந்தே போய்விட்டோம்.

கலைவாணரிடம் பெரும் பகைமை பூண்டிருந்தவரும் ஓரளவு பிரபலமானவருமாகிய சென்னையைச் சேர்ந்த ஒரு நபர், வானொலியில் வந்த கலைவாணரின் பேச்சை அப்படியே ஒலிப்பதிவு செய்துவிட்டார். அவர் அத்தோடு நிற்கவில்லை. ஆங்கிலம் அதிகம் தெரியாத அவர், ஆங்கிலமறிந்த ஒருவரை வைத்து இப்பேச்சின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தயாரித்துவிட்டார். தமிழ், ஆங்கிலம், ஒலிப்பதிவு நாடா ஆகிய மூன்றையும் அப்படியே அமைச்சருக்கு அனுப்பி, இவ்வாறு பேசிய கலைவாணரை நீதிமன்றத்திற்கு இழுத்துத் தண்டிக்க வேண்டும் என்ற தம்முடைய மேலான கருத்தையும் அந்தப் பிரமுகர் அமைச்சருக்கு எழுதிவிட்டார். கலைவாணருக்குப் பல விரோதிகள் உண்டு என்பதை நாங்கள் அறிவோம். அவர்களுள் ஒருவர் இவ்வளவு நுணுக்கமாக வேலை செய்வார் என்பதை நாங்கள் கனவிலும் சிந்திக்கவில்லை.

இந்த நிலையில் உண்மையை அப்படியே அமைச்சரிடம் ஒப்புக்கொண்டு, நாங்கள் ஏன் ஒலிபரப்பை நிறுத்தாமல் அப்படியே விட்டோம் என்ற காரணத்தையும் அமைச்சருக்குச் சொல்ல விரும்பினோம். கூர்த்த மதியினரும் ஆட்சித்துறை, நுணுக்கமும் நன்கு அறிந்திருந்த டாக்டர் மேனன், எழுத்துமூலம் இதனை எழுத விரும்பவில்லை. சில நாட்கள் கழித்துத் தொலைபேசி மூலம் நடந்தவற்றையெல்லாம், அமைச்சருக்குத் தெரிவிப்பது என்ற முடிவுடன் என்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அமைச்சரிடம் பேசினார் டாக்டர் மேனன்.