பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாஷா கவிசேகர மகாவித்துவான் ரா.இராகவையங்கார் சுவாமிகள் ♦ 35



இந்தச் சூழ்நிலையில் தமிழ் படிக்காமல் இயற்பியலில் நான் சேர்ந்தது என் தந்தையாருக்குப் பெரிய வருத்தத்தை உண்டாக்கிவிட்டது. இது போதாதென்று நாவலர் சோமசுந்தர பாரதியாரும் “உங்கள் மகனே தமிழ் எம்.ஏ (M.A.) படிக்க வரவில்லை என்றால், யாரைக் குறை சொல்வது?” என்று ஒரு கடிதம் எழுதிவிட்டார். இதற்குள் இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.

திரு. சோமசுந்தர பாரதியாரும் என் தந்தையும் சேர்ந்து எப்படியாவது என்னைத் தமிழ்த் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவில் இருந்தார்களாதலின், நாவலர் பாரதியார் அவர்கள் என்னை அழைத்து “நீ தமிழுக்கு வந்துவிடப்பா” என்றார். அதை மறுப்பதற்கும் என்னால் முடியவில்லை; அவர் கூறியபடி இத்துறைக்கு வரவும் விருப்பமில்லை. ஒரு தந்திரம் செய்வதாக நினைத்துக் கொண்டு, ‘திரு. ரா.இராகவையங்கார் சுவாமிகள் பாடம் எடுப்பதானால் வருகிறேன்’ என்று சொன்னேன். அவ்வாறு சொல்வதற்கு ஒரு காரணமிருந்தது. திரு. சுவாமிகள் ஆராய்ச்சித் துறையில் தலைமை வகித்தாரே தவிரத் தமிழ்த் துறைக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. என்னை அனுப்பிய பிறகு நாவலர் பாரதியார், சுவாமிகளை அழைத்துவைத்துக்கொண்டு, என்னையும் வருமாறு பணித்தார். நான் இருக்கும்போதே என்னுடைய வேண்டுகோளைச் சுவாமிகளிடம் கூறிவிட்டு, நான் இன்னாருடைய மகன் என்பதையும் நினைவுபடுத்தினார். அதைக் கேட்ட சுவாமிகள் “பாரதி என் நண்பர் முதலியார், மிகப் பெரிய அறிவாளியென்பது தெரியும். அதனால் அவருடைய மகனும் அவ்வாறு இருப்பானென்று எங்கே சொல்லியிருக்கிறது” என்றார். அப்பொழுது பாரதியார், “சரி சுவாமி, ஒரு நாளைக்குப் பாடமெடுத்துப்