பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாஷா கவிசேகர மகாவித்துவான் ரா.இராகவையங்கார் சுவாமிகள் ♦ 39


என்ன சார் பிரமாதம் வகுப்புகள் முடிந்த பிறகு மாலை நாலரை மணிக்குமேல் தினம் சுவாமிகள் பாடம் எடுக்கட்டும் என்று கூறிவிட்டேன். அனைவரும் இதை ஏற்றுக்கொண்டதால் தமிழுக்கு வருவதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை. மறுவாரமே இயற்பியலிலிருந்து தமிழுக்கு மாற்றப்பட்டேன். இதுவே நான் தமிழ் படிக்க வனந்த கதை.

நாள்தோறும் சுவாமிகள் திருக்குறள் நடத்தத் தொடங்கினார். பேரறிஞரும் பெருஞ் செல்வாக்குடையவருமான அப்பெருமகனார் “எங்களைப் பார்த்து நீங்க என்ன நினைக்கிறீங்க? பரிமேலழகர் சொல்வது சரிதானா?” என்றும் கேட்பார். மாறுபட்ட கருத்துக்களைச் சொன்னால் அப்படியே கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் இருப்பார்.

முற்றிலும் முரண்பட்ட சூழ்நிலையில் அவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு: சுவாமிகளின் அம்மான்சேய் பெரும் புலவர் மு. இராகவையங்கார் ஆவார். அவர் “ஆழ்வார்கள் கால நிலை” என்றதொரு நூலை எழுதி வெளியிட்டிருந்தார். ஆண்டாள் நாச்சியாரின் காலத்தை முடிவு செய்வதற்காக ஒரு வழியைக் கையாண்டார். “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று” என்ற திருப்பாவைத் தொடரை எடுத்து, ஒன்று கீழ்த்திசையில் எழவும், மற்றொன்று மேற்குத்திசையில் மறையவும் நிகழும் நிகழ்ச்சியை அது குறிப்பதாகத் திரு. மு. இரா. அவர்கள் முடிவுக்கு வந்தார். 180 டிகிரி கோணத்தில் வெள்ளியும், (சுக்கிரன்) வியாழனும் (குரு) இருக்கும் நிலை எப்பொழுதெல்லாம் வருகிறது என்பதை அறிந்து சொல்லுமாறு அன்று பிரசித்தமாக இருந்த எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளை என்ற வானியல் அறிஞரிடம் திரு. மு. இரா. கேட்டிருக்கிறார். திரு. பிள்ளையவர்கள் வானியல் ஆராய்ச்சி நிபுணர் ஆகையால், இந்த இரண்டு கோள்களும்