பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாஷா கவிசேகர மகாவித்துவான் ரா.இராகவையங்கார் சுவாமிகள் ♦ 43




தஞ்சமென்றடைந்தோரைத் தள்ளிடப் போமோ
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ

என்ற பகுதியைப் பாடும்போது கண்ணீர் வடிக்கத் தொடங்கிய சுவாமிகள், கண்ணீரும் கம்பலையுமாகவே கேட்டுக்கொண்டிருந்தார். பாட்டை நிறுத்தியவுடன் “அடேய்! நம்மாழ்வார் பாட்டுத் தெரியுமா உனக்கு இதே கருத்தை,

நண்ணாதார் முறுவலிப்ப நள்ளுற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர் விளைக்கும் இவையன்ன
உலகியற்கை (2502)

என்ற பாடல்தான் ‘பஞ்சமும் நோயும்' என்ற சொற்களில் வெளிப்படுகிறது” என்றார்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்ற பகுதியைப் பாடியவுடன், “இதே கருத்தை நம்மாழ்வார் ஒரு பாடலில் பாடியுள்ளார்” என்று கூறிவிட்டு, அந்த அடிகளையும் எடுத்துச் சொன்னார்.

அவை:

‘மண்ணையிருந்து துழாவி
‘வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைத் தொழுதவன் மேவு
வைகுந்த மென்றுகை காட்டும் - (நம். 2447)


‘அறியும் செந்தீயைத் தழுவி
அச்சுதன் என்னும்; மெய் வேவாள் - (நம். 2449)

சைவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நம்மாழ்வாரைப்பற்றியோ அவர்கள் பாடல்கள் பற்றியோ