பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

மேற்பட்ட நூல்களை எழுதவும், பல விருதுகளைப் பெறவும் என்ன தகுதி பெற்றிருந்தான்? மேலே கூறப்பெற்ற மாமனிதர்களின் ஆசியை இவன் முழுவதுமாகப் பெற்றிருந்தான். சிந்தித்துப் பார்த்தால், இம்மாமனிதர்களின் உபகாரம் ஒருவனின் தகுதியைப் பார்த்துச் செய்யப்படுவதன்று; அது தன்னிச்சையாகப் பொங்கிவந்து நம்மில் பாய்கிறது என்பதை ஒவ்வொரு விநாடியும் உணர முடிகிறது.

யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ யோக சுவாமிகளும், காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்களும் யாருக்கும் கிடைக்காத ஆசிகளை வாரி வழங்கினார்கள் என்றால், அதற்கு எப்படி நான் தகுதியுடையவனாக இருக்கமுடியும்! ஒரு சிறிதும் தகுதியில்லை என்பதை நான் உணர்வேன். ஆனால், இந்த மகான்கள் வழங்கிய ஆசிகள் எண்ணில் அடங்காதவை. ஏன் தந்தார்கள்? எதற்காகத் தந்தார்கள்? கோடிக் கணக்கான மக்களில் என்னை ஏன் தேர்ந்தெடுத்து வழங்கினார்கள் என்ற வினாக்களுக்கு இந்தப் பிறப்பில் மட்டுமன்றி எந்தப் பிறப்பிலும் விடை காண முடியுமென்று தோன்றவில்லை. ஒருவேளை என் முன்னோர் செய்த தவப்பயனால் இவை எனக்குக் கிடைத்திருக்கலாம். அது எவ்வாறாயினும், இம்மகான்களின் பூரண ஆசியைப் பெற்று இதுவரை வாழ்ந்துவருகிறேன்.

வ.உ.சி, திரு.வி.க, தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம். அவற்றைத் தொகுத்துரைப்பது என் நோக்கமன்று. இப்பெருமக்களிடம்