பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 59


தலையங்கத்திலுள்ள சில வாக்கிய அமைப்புகள் ஓரளவு பிழையுடையனவாக இருக்கலாம். ஆனால், தங்களுடைய சிறுசிறு வாக்கியங்கள் என் மேல்மனத்தையும், அடிமனத்தையும் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று தங்கிவிட்டன. சொற்களால் ஆகிய வாக்கியங்கள் செய்யவேண்டிய பணி இதுதானே! அதனை முழுமையாகச் செய்யும் தங்கள் வாக்கியங்களைத் திருத்த நான் யார்? என்னுடைய குறைபாட்டை உணர்ந்துகொண்டேன். தயைகூர்ந்து பிழை திருத்துவதற்காக ஹரிஜன் இதழை எனக்கு இனி அனுப்பவேண்டா. என்னை மாற்றும் பணியைத் தாங்கள் அனுப்பிய இந்த இதழ் செய்துவிட்டது. இனி உங்கள் எழுத்தில் கைவைக்க எனக்குத் தைரியமில்லை, மன்னித்துக் கொள்க. தங்கள் அன்புள்ள வி.எஸ். சீனிவாச சாஸ்திரி’

என்ற முறையில் அந்த ஆங்கிலக் கடிதம் இருந்ததைச் சக மாணவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.

மாணவர்களாகிய எங்கள் கண்களிற்கூட அக்கடிதம் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

இக்கடிதத்தின் பயன் என்ன என்று நினைக்கிறீர்கள்: இனி ‘ஹரிஜன்’ இதழைப் பிழை திருத்துவதற்காக மகாத்மா அனுப்ப மாட்டார் என்றுதான் துணைவேந்தர் உட்பட நாங்கள் அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால், மகாத்மாவை எடைபோட நாங்கள் யார்? தவறாமல் வழக்கம்போல் ‘திருத்தத்திற்காக’ என்ற தலைப்புடன் ‘ஹரிஜன்’ இதழ் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், சாஸ்திரியார் திருத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. ஓ! இரண்டு மாமனிதர்களிடையே இப்படி ஒரு சிக்கல்