பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அருளையும் சென்னையில் மகனின் (வடபழனி முருகன்) அருளையும் பூரணமாகப் பெற்றிருந்த பி.டி.ஆர். அவர்கள் ‘தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகவே’ வாழ்ந்து வந்தார்.

சாதி, சமய, கட்சி வேறுபாடுகள் ஒருசிறிதுமின்றி எத்தனை ஆயிரம் பேருக்கு வேலைவாங்கித் தந்து அக்குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்தார் என்பதைப் பலரும் அறிவர். காங்கிரஸ் கட்சியில் பெருமையுடன் வீற்றிருந்த மதுரை வைத்தியாத ஜயர், ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் எதிர்க்கட்சிக்காரரான பி.டி.ஆரிடம் கொண்டிருந்த மதிப்பிற்கு அளவேயில்லை.

இன்று ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் சென்று வழிபடும் சபரிமலைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தர்மசாஸ்த்தா என்று அழைக்கப்பெறும் ஐயப்பனின் விக்கிரகத்தை அறுபத்தைந்து அல்லது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிரதிஷ்டை செய்யும் பெரும்பொறுப்பு வகித்தவர் பி.டி.ஆர் என்பது பலருக்கும் தெரியாத இரகசியமாகும். அந்நாட்களில் ஒரு விக்கிரகத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டுமானால் அதற்குரிய சில வழிமுறைகள் இருந்துவந்தன. அந்த விக்கிரகத்தைச் செய்து ஊர்வலமாக நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனைக் ‘கரிக்கோலம்’ என்று கூறுவர். சாஸ்த்தாவின் விக்கிரகத்தைத் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று இறுதியில் சபரிமலையில் பிரதிஷ்டை செய்ய உடனிருந்து உதவியவர் பி.டி.ஆர் என்பதை இன்று பலர் அறிய மாட்டார்கள்.

அடுத்துப் பி.டி.ஆர். ஈடுபட்டது அவர் வழிபடும் தாயாகிய அன்னை மீனாட்சியின் திருக்கோயிற் பணியிலாகும். 1963இல் பல இலட்சங்கள் வசூல்செய்து அன்னையின் திருக்கோயிலைப் பழுதுபார்த்துக்