பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 ♦ நான் கண்ட பெரியவர்கள்



பாடல்களைச் சொல் பிரித்து, சிறுசிறு தலைப்புகளுடன் அச்சிடும் பணி நிறைவு பெற்றுச் சென்னைக் கம்பன் கழகத்தின் வாயிலாக அந்நூல் வெளியிடப்பெற்றது.


14. ஏ. என். சிவராமன்


கம்பன் விழாவிற்குச் செல்லும் காரணத்தால், தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

பத்தாவது வகுப்புவரைமட்டுமே படித்த அந்த அறிஞர் பொருளாதாரம் அரசியல் என்ற துறைகளில் மாபெரும் அறிஞராகவே விளங்கினார். அவர் எழுதிய விவசாயிகள் பற்றிய நூல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வகுப்பு மாணவர்கட்குப் பாடமாகக்கூட வைக்கப் பெற்றிருந்தது. எவ்விதப் படாடோபமுமின்றி என்னிடமும் என் குடும்பத்தாரிடமும் நெருங்கிப் பழகியவர் திரு. ஏ.என்.எஸ். 1960 முதல் சென்னையிலிருந்து என் காரிலேயே காரைக்குடி கம்பன் விழாவிற்குச் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். இவர் மிகப் பல ஆண்டுகள் என்னுடன் என் வண்டியிலேயே வீடு திரும்புவார். அந்த மாமனிதரின் எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு பின்வருமாறு:

ஆண்டு சரியாக நினைவில் இல்லை. 1962 அல்லது 1963 ஆக இருக்கலாம். திரு. சிவராமன் தொலைபேசி மூலம் அழைத்து ‘டேய் சம்பந்தா, நான் உன்னுடன் வருகிறேன்’ என்றார். நான் அப்போது வைத்திருந்தது ஃபியட் கார். ஒட்டுபவர், நான் என்ற இருவர் தவிர, விழாவிற்கு வருவதாக ஆசைப்பட்ட இருவரை அழைத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டிருந்தேன். வசதி படைத்த சிவராமன், இந்த வண்டியில் ஐந்தாவது ஆளாக வருவதை நான்