பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 ♦ நான் கண்ட பெரியவர்கள்


குப்புசாமி வண்டியின் கதவருகே மிக்க பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு ஒர் அதிர்ச்சி, யாரைப் பார்த்து ‘ஓ ஐயரே’ என்று கூப்பிட்டானோ, அதே மனிதர் ஒரு சிறு கைப்பெட்டியுடன்வண்டிக்குள் வந்து அமர்ந்துவிட்டார். கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வண்டியை ஒட்டிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வண்டியை நிறுத்திவிட்டு, வாரன் ரோடில் அமைந்திருந்த என் வீட்டின் பின்புறமாகச் சென்று “அம்மா, அம்மா” என்று கத்தினான். முன்புறத்தில் சிவராமனை நானும் என் மனைவியும் வரவேற்றுக்கொண்டிருந்தோம். குப்புசாமியின் குரலைக் கேட்டு என் மனைவி பின்புறம் சென்றாள். ஓட்டுநர் குப்புசாமி பெருந் தவறு நடந்துவிட்டது என்று சொல்லி, நடந்தது முழுவதையும் விவரித்துவிட்டான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, முன்புறம் வந்த என் மனைவி, நடந்தவற்றை அப்படியே சொல்லி, அவன் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

இந்த விநாடிதான் சிவராமன் என்ற மனிதர் மாமனிதராக வளரும் சூழ்நிலை உருவாயிற்று. விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, ‘டேய் குப்புசாமி’ என்று அவரே அழைத்தார். மிகவும் பயத்துடன் அவன் அவர் எதிரே வந்து நின்றான். குப்புசாமி, இன்றிலிருந்து போய்த் திரும்புகிற நான்கு ஐந்து நாட்கள் வரை இந்த வண்டி என்னுடையது. நீ என்னுடைய ஓட்டுநர். யார் சொல்வதையும் நீ கேட்கத் தேவையில்லை. நான் சொல்வதுபோல் செய்துவிட்டால் போதும் என்று சொல்லிவிட்டார். பிறகு புத்தம் புதிய ஒரு ரூபாய் தாள் 100 அடங்கிய ஒரு கட்டை அவனிடம் கொடுத்துவிட்டு, ‘இதை வைத்துக்கொள் வண்டிக்குப் பெட்ரோல் எல்லாம் அ.ச. போட்டுவிடுவார். இந்த ரூபாயெல்லாம் எதற்கு என்று நினைக்கிறாயா? வண்டி புறப்படும் முதல் காரைக்குடி போய்ச் சேரும்வரை வேர்க்கடலை, நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றைச்