பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏ.என்.சிவராமன் ♦ 83


சாலையில் எங்கே கண்டாலும், உடனே வண்டியை நிறுத்தி வாங்கிக்கொள். சாப்பிட்டுக் கொண்டே போகலாம் என்று கூறினார். அவர் சொன்னபடியே செய்தோம். காலையில் 9 மணிக்கு சென்னையை விட்டுப் புறப்பட்ட நாங்கள், வேர்க்கடலை, நுங்கு முதலியவற்றை வாங்கித் தின்றுவிட்டு இரவு 8 மணிக்குக் காரைக்குடி போய்ச் சேர்ந்தோம்.

‘தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனை மிகப் பலருக்குத் தெரியும். ஆங்கிலம், தமிழ், வடமொழி என்ற மூன்றிலும் வல்லவர். நான்கு வேதங்களையும் அத்யயனம் பண்ணச் சொல்லி, அதனைப் பெரிய டேப்புகளில் பதிவு செய்து ஓயாமல் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒரு ஓட்டுநர் காட்டிய அவமரியாதையையும் மிக அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவனை ஒரு மகன்போல நடத்திய பொழுது சிவராமன் என்ற மனிதருக்குள் ஒரு மாமனிதர் புகுந்திருப்பதைக் காணமுடிந்தது.

ஒரு முறை, காரைக்குடி விழாவில் தாடகையைப் பற்றிப் பேச வேண்டியவர் வரவில்லை என்பதைக் கடைசி நேரத்தில் அறியவந்த கணேசன் என்ன செய்வதென்று தெரியாமல் சிவராமனைக் கேட்டார். அப்பொழுது சிவராமன் ‘முன்னறிவிப்பு இல்லாமல் பேசவேண்டும் என்றால், அந்தப் பய அ.ச. எங்கேயாவது வெற்றிலையைப் போட்டுக்கொண்டு குதப்பிக்கொண்டு இருப்பான். ஒலிபெருக்கியில் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடு’ என்றார். இவ்வாறு நடந்தது ஒன்றும் எனக்குத் தெரியாது. கணேசன் என் பெயரைச் சொல்லி அழைத்ததும் எங்கோ இருந்த நான் வேகமாக ஓடிச் சென்றேன். நான் உள்ளே சென்றதும் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தாடகைபற்றி நான் பேசுவேன் என்று அறிவித்துவிட்டார். வேறு வழியில்லாமல் பேசத் தொடங்கியதால் புதிய சிந்தனை உருவாயிற்று. சட்டம் ஒன்றேயாயினும் கீழ்நீதி மன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்ற மூன்று