பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஏன் இருக்கிறது என்று தொடங்கி, ‘சட்டத்தைக் கூறும் சொற்றொடரும் அந்தச் சட்டத்தின் எண்ணிக்கையும் மாறப்போவதில்லை. அப்படியிருக்க மூன்று நீதிமன்றங்கள் ஏன்’ என்ற வினாவைக் கேட்டு, அதன் பொருளையும் கூறினேன் சட்டம் ஒன்றுதான். ஆனால் அதில் காணப்பெறும் வார்த்தைகளுக்குப் பொருள் கூறும் முறையில் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. எனவே, ஒரே சட்டத்திற்கு விளக்கம் கூறும் முறையில் (interpretation of law) நீதிமன்றங்கள் பணிபுரிகின்றன என்று கூறிவிட்டு, தாடகையைப்பற்றிப் பேசத் தொடங்கினேன். தாடகை பெண் என்பதால் அவள்மீது அம்பைத் தொடுக்க இராமன் விரும்பவில்லை. இராமனுக்குக் கல்வி போதித்த வசிட்டன், ‘பெண்ணின்மேல் அம்பு எய்யாதே’ என்று சொல்லியிருந்தான். அந்தப் பாடம் இராமன் மனத்திடை ஆழமாகப் பதிந்திருந்ததால் அம்பைத் தொட்டாலும் பெண் என மனத்திடைப் பெருந்தகை நினைந்தான் இப்பொழுது விசுவாமித்திரன் உச்ச நீதி மன்றமாகப் பணிபுரிகிறான். ‘இராமா, வசிட்டன் சொல்லிக் கொடுத்த பாடம் சரி’, ‘பெண்’ என்றுதான் வசிட்டன் கூறினானே தவிர, யார் பெண் என்று கூறவில்லையே இங்கே பெண் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவதன்மூலம், விசுவாமித்திரன் இராமன் ஐயத்தைப் போக்குகிறான். வடிவத்தால் பெண் ஆயினும் இவள் பெண் அல்லள் என்று விளக்குவதன் மூலம் இராமன் ஐயத்தைப் போக்கிவிட்டான். வசிட்டன், கீழ் நீதிமன்றம்; விசுவாமித்திரன் உச்ச நீதிமன்றம் ‘பெண்ணின் மேல் அம்பு விடக் கூடாது’ என்ற சட்டத்தை விசுவாமித்திரன் மாற்றவில்லை. ஆனால் யார் பெண் என்பதை விளக்குவதன்மூலம், அந்தப் பழைய சட்டத்திற்குப் புதிய விளக்கம் தந்துவிட்டான்.

இதனை இவ்வளவு விரிவாகக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. எதிரே அமர்ந்திருந்த சிவராமன் இதை நான் கூறி முடித்தவுடன் மேடையின்மேல் எழுந்துவந்து