பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏ.என்.சிவராமன் ♦ 85


என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ஒலிபெருக்கியின் மூலம் பின்வருமாறு பேசினார். ‘ஏ கணேசா, இனிமேல் இந்தப் பயலுக்கு எந்தத் தலைப்பும் தந்து பேசச் சொல்லாதே. இப்படித் திடீரென்று கூப்பிட்டுப் பேசச் சொன்னால்தான் புதிய சிந்தனைகள் தோன்றும்’ என்றார்.

சிவராமன் என்ற மாமனிதரின் மற்றொரு வெளிப்பாடு இது.

தாம் சிரிக்காமல் பிறரைச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை சிவராமனிடம் நிரம்ப உண்டு. கம்பன் விழா நடைபெறும்பொழுது ஏதோ ஒரு நாளில் திருப்பெருந்துறை சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிவராமன் நினைத்தார். முன்னர்ப் போய்வந்தவன் ஆதலால் எனக்கு ஓரளவு வழி தெரியும் ஒரு ரெயில்வே கேட்டிலிருந்து ஏழு மைல் சென்றால் ‘திருப்பெருந்துறை அடையலாம்’ என்று நான் கூறினேன். பக்கத்தில் கணேசன் இருந்தார். ‘சிவராம்ஜி இவன் கிடக்கிறான் இவனுக்கு என்ன தெரியும்? நான் சொல்கிறேன். அந்த ரெயில்வே கேட்டிலிருந்து ஒரு மைல் போனவுடன் திருப்பெருந்துறையைக் காணலாம்’ என்றார். நாங்கள் புறப்பட்டோம். குப்புசாமி தான் வண்டி ஓட்டினான். ரயில்வே கேட் வந்தது. அடே குப்புசாமி! சரியாக ஒரு மைல் போனவுடன் வண்டியை நிறுத்து’ என்றார் ஏ.என்.எஸ். ஒரு மைல் போனவுடன் நட்ட நடு ரோட்டில் வண்டி நின்றது. சுற்று வட்டாரத்தில் எந்த ஊரும் இல்லை. சிவராமன் வண்டியிலிருந்து இறங்கினார். ‘எல்லோரும் இறங்குங்கள்’ என்றார். ஒன்றும் புரியாமல் எல்லோரும் இறங்கினோம். ‘சா.க. (கணேசன்) சொன்னால், அது எப்படித் தப்பாக இருக்கமுடியும் திருப்பெருந்துறை பூமிக்குள் போய்விட்டது. இப்பொழுது வண்டியைச் சுற்றி வந்து திருப்பெருந்துறை ஈசனுக்கு வணக்கம் செலுத்துவோம்’ என்றார். அப்படியே அனைவரும் செய்தோம் பிறகு வண்டியில் ஏறிக்கொண்டு ‘டேய் சம்பந்தா, நீ சொன்ன