பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏ.என்.சிவராமன் ♦ 87



கிருஷ்ண யசுர் வேதத்தின் நான்காவது பிரபாடகத்தின் இறுதியில் அமைந்துள்ள ஸ்ரீருத்ரம்பற்றி ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டேன். அந்த மூன்று ஆண்டுகள் உழைப்பின் பயனாகப் ‘பெரிய புராணம் ஓர் ஆய்வு’ என்ற நூலை எழுதி முடித்தேன். ஸ்ரீருத்ரம்பற்றிய ஆய்வு அந்த நூலில் இடம்பெற்றாலும், இது எந்த நேரத்தில் யாரால் எப்படி யாகமாகச் செய்யப்பெற்றது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, 1985ல் பெரியபுராணம் ஓர் ஆய்வு 800 பக்கங்களுக்கு மேல் உள்ள பெருநூலாக வெளிவந்தாலும் ஸ்ரீருத்திரத்தின் அடிப்படையென்ன என்பதுபற்றி அப்பதிப்பில் ஒன்றும் எழுத முடியவில்லை. இக்குறை என்மனத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது.

ஏ.என்.சிவராமன் அவர்கள் கிருஷ்ண யசுர் வேதத்தைப் பெரிய ஒலி நாடாக்களில் பதிவு செய்து, எங்குச் சென்றாலும் அதை எடுத்துச்செல்வது வழக்கம். ஓய்வு நேரங்களில் அதை இயந்திரத்தில் ஏற்றித் தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக ‘இயர் போனைப்’ (ear phones) பயன்படுத்திக் கேட்டுக்கொண்டேயிருப்பார்.

ஒரு முறை கம்பன் விழாவிற்காகக் காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தில் நாங்கள் தங்கியிருந்தபொழுது ‘யசுர் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்களே, ஸ்ரீருத்திரம் எங்கே எப்பொழுது செய்யப்பெற்றது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். புன்சிரிப்புடன் “சம்பந்தா ஒவ்வொரு ஒலி நாடாவும் 1200 அடிநீளமுள்ள ஒலிநாடாக்கள். இதுபோல் பத்தொன்பது ஒலிநாடாக்கள் உள்ளன. இதில் எங்கே போய்க் கண்டு பிடிப்பது” என்றார். எப்படியாவது தாங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்றவுடன், ஒரு விநாடி கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டு, “சம்பந்தா! நீயும் கண்ணை மூடிக்கொண்டு ஒலிநாடாக்கள் வரிசையாக இருக்கும்