பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 நாம் அறிந்த கி.வா.ஜ.

திகழ்த்துவது என்றால் மிகவும் பெருமையாகக் கருது வார்கள். -

அன்று நடைபெற்ற கருத்தரங்கிலும், பூரீமத் ஜயர் இவரைப் பேசச் சொன்னார்.

X: - - X х

ஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனால் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில், வாதத்தில் சமணர்கன் தோற்றவுடன் ஞானசம்பந்தர் அவர்களை, தோணி லீர்! மன்னன் முன்னர் நல்ல சொல்கிறேன், கண்டீர்: பூணும் வெண்ணிறு பூசும்; போற்றி ஒயஞ்செழுத்தை போதும்” காணொணா முத்தி இன்பம் காணலாம்’ என்றுதான் அருளினார். கழுவில் ஏற்றச் சொல்லவில்லை. சமணர் களில் சிலர் சைவ சமயத்தில் சேர்ந்தார்கன். ஆனால் பலர், வாதத்தில் தோற்றாலும் சபதத்தில் தாங்கள் தோற்கத் தயாராக இல்லை என்று வீம்போடு தாமே கழுவேறினார்கள் என்று வருகிறது.

தக்கயாகப் பரணியிலும் இதே கருத்து உள்னது: :வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்றுதல் ஆகாது என்று பிள்ளையார் விலக்கி அருள’ என்று வருமிடத்தில் சம்பந்தப் பெருமானின் பெருங் கருனைத் திறம் நன்கு புலப்படுகின்றது. -

X X х

அதுகாறும் வெளிவராத தக்கயாகப் பரணி காலை பூசிமத் ஐயர் ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டிருந்தார்: அவரே டு இவரும் அந்நூலைப் படித்து, ப்ரூஃப்”

ட் ர்த்துக்கொண்டும் இருந்தார்.

எனவே, பூரீமத் ஐயரின் கட்டளைப்படி அந்தக் கருத்தை வைத்தே, சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றவில்லை. சைவ சமயத்தில் சேருங்கள்” என்றே அருளினார்’ என