பக்கம்:நாயகர் பெருமான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

டாய்’ ஆகவே, இந்த அநாதைக் குழந்தையை உன்னிடம் ஒப்படைக்க நான் நினைக்க வில்லை” என்று கூறிவிட்டார் பெரியவர்.

அடுத்து ஹஸரத் அப்பாஸ் அவர்கள் முன்வந்த போது, அவரை நோக்கி அப்துல் முத்தலிப் இவ்வாறு கூறினார்.

“மகனே, உனக்குப் பிள்ளைகள் அதிகம். அவற்றை வளர்த்துப் பாதுகாக்கவே உனக்குச் சரியாக இருக்கும். அத்தோடு, இந்தப் பிள்ளையையும் சேர்த்துக் கொண்டால், நீ எப்படி இதைக் கவனித்து வளர்க்கப் போகிறாய்?” என்று கேட்டு மறுத்து விட்டார்.

கடைசியாக, அபூதலிப் அவர்களின் முறை வந்தது. அவர் தன் தந்தையை நோக்கி, “தந்தையே, நான் பெரிய பணக்காரனுமல்லன்; பிள்ளைகள் இல்லாதவனு மல்லன்; அதிகப் பிள்ளைகள் பெற்றவனுமல்லன். ஆகவே, இவனை வளர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

தன் உடன் பிறந்தார்களுக்குக் கூறிய பதிலையே தந்தையார் கூறிவிடுவாரோ என்ற பயம் அவர் உள்ளத்தில் இருந்தது. ஆனால் அப்துல் முத்தலிப் அவர்கள் அன்புடன் அவரை நோக்கி, “மகனே, என் ஆசையை நிறைவேற்றத் தகுதியுடையவன் நீ என்-