பக்கம்:நாயகர் பெருமான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

பதில் ஐயமில்லை. ஆயினும், குழந்தையின் கருத்தையும் அறிந்து கொள்வோம்” என்று கூறிப் பெருமான வர்களை அழைத்தார்.

“கண்மணியே, எனக்கு வயது அதிகமாகி விட்டது. இன்னும் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று சொல்ல முடியாது. எனக்குப் பின் உன்னை வளர்க்கும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்ள முன் வருகிறார்கள். இவர்களில் யாருடன் இருக்க உனக்கு விருப்பம்?” என்று பெருமானை நோக்கிக் கேட்டார் அவர்.

பெருமானவர்கள் சிரித்துக்கொண்டே சென்று அபூதலிப் அவர்களின் மடியில் அமர்ந்து கொண்டார்கள்.

இக் காட்சியைக் கண்டதும் அப்துல் முத்தலிப் அவர்களின் கண்களில் நீர் ததும்பியது. தன் அருமை மகனை நோக்கி, “அபூதாலிப், பாவமறியாத இக் குழந்தைக்குத் தந்தையின் அன்பு இப்படிப்பட்ட தென்று தெரியாது. தாயையும் இவ்வளவு சிறுவயதிலேயே இழந்து விட்டது. ஒரு குறையும் வராமல் காப்பாற்றுவது உன் பொறுப்பு” என்று கூறினார்கள்.

இந்த ஏற்பாடு நடந்த சில நாட்களுக்குப் பின்னர், அவர்கள் மன அமைதியுடன் தம் கண்களை மூடினார்கள்.