பக்கம்:நாயகர் பெருமான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

மறு நாள் காலையில் பெருமான் முஹம்மது அவர்களே எல்லோருக்கும் முன்னால் அங்கு வந்திருந்தார். எல்லோருக்கும் இனியவராகிய அவரின் முடிவை ஏற்றுக்கொள்ள மக்கா நகர் மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

பெருமானவர்கள், திருச்சின்னத்தை நிலை நாட்டும் பணியை நிறைவேற்ற யாரும் மனங்கோணாத ஓர் அரிய வழியைக் கண்டு பிடித்துக் கூறினார்கள்.

அகலமான ஒருகனத்த துணி கொண்டு வருமாறு கூறி, அதில் ஹஜர் அஸ்வத்தைத் தூக்கி வைத்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரினின்றும் ஒவ்வொரு தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து துணியைப் பற்றித் தூக்கி, திருச்சின்னத்தை அதற்குரிய இடத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கச் செய்தார்கள். அதைத் தம் கையால் உரிய இடத்தில் நிலைநாட்டினார்கள்.

இச் செயலால் எல்லாக் கூட்டத்தினரும் மன நிறைவு கொண்டார்கள். பெருமானைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

5. வாழ்க்கைத் துணையாய் வாய்த்த பிராட்டியார்

பெருமானவர்களுக்கு அப்போது இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருந்தது. கல்வி கற்க

நபி-2