பக்கம்:நாயகர் பெருமான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறிவித்தார். பிறரிடம் அவர் இச்செய்திகளை அறிவித்த போது அவர்கள் நம்பாதது மட்டுமன்றி, எதிர்க்கவும் தொடங்கினர்.

8. சிறிய தந்தையின் சீற்றம்

நபி பெருமானின் சிற்றப்பா ஹம்ஸா பெரு வீரர். வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவர். விடியற் காலையில் வில்லும் அம்புமாய்ப் புறப்பட்டால், பகல் முழுவதும் வேட்டையாடி விட்டு அந்தி நேரத்தில் தான் வீடு திரும்புவார். அவர் பெருமானவர்கள் மீது மிக்க அன்புடையவராயிருந்தும் புனித மார்க்கத்தில் அதுவரை சேரவில்லை.

ஒரு நாள் அவர் வேட்டையாடிவிட்டுத் திரும்பும் வழியில் மனந்துடிக்கும் ஒரு செய்தியைக் கேள்விப் பட்டார்.

அபூஜாஹில் என்பவன் பெருமான் அவர்களின் உறவினன். பெருமான் அவர்களைப் பெற்றெடுத்த குறைஷி இனத்தில் ஒருபெருந் தலைவனாகக் கருதப் பெற்றவன். அவன் பெருவீரன் ஆயினும் மிகக் கொடிய வன். வீரர்களுக்குரிய சிறந்த பண்பாடுகள் அவனிடம் கிடையா. பெருமானவர்கள் இறைவனின் தூதராகப் கொள்ள வில்லை. எனவே இசுலாத்தின் பகைவனானான். இசுலாத்தை ஒழிப்பதே தன்கடனெனக் கருதிச் செயலாற்றி வந்தான் அத் தீயவன்.