பக்கம்:நாயகர் பெருமான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஒன்றுமில்லை. இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்து தாங்கள் இப் புனித மார்க்கத்தில் சேர்வீர்களானால் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி தரும்” என்று கூறினார்கள்.

இவ்வினிய சொற்கள் ஹஸரத் ஹம்ஸா அவர் களின் இதயத்தில் ஒரு சிறந்த எழுச்சியைத் தோற்று வித்தன. அவர்கள் அன்றே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

9. மக்கா மலையை முட்டிய பேரொலி

பெருமானைப் பிறவிப் பகைவராகக் கருதிய அபூ ஜாஹில் என்பவன் ஒரு நாள் குறைஷி இனத்துத் தலைவர்கள் அனைவரையும் கூட்டினான். அவர்கள் அனைவருக்கும் வீர உணர்ச்சி வரும்படியாகப் பேசினான்.

“இளைஞர்களே, உங்கள் மதமும் கடவுள்களும் ஒரு தனி மனிதனால் கேவலப்படுத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு உங்களால் உயிரோடு இருக்க முடிகிறதா? வீரமற்ற கோழைகளா? ஏன் சும்மாயிருக்கிறீர்கள்?” என்று கேட்டதோடு அவன் நின்று விட வில்லை . யார் நபிபெருமான் அவர்களின் தலையை வெட்டிக் கொண்டு வருகிறானோ, அவனுக்குச் சமூக சேவைப் பரிசாக நூறு ஒட்டகங்கள் கொடுப்பதாகவும் ஆசை யூட்டினான்.