பக்கம்:நாயகர் பெருமான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

மக்காவிலிருந்த குறைஷிக் குலத்துத் தலைவர்கள் எல்லாரும் சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தனர். அவருக்கு ஆடம்பரமான உபசாரங்கள் நடந்தன. அவர் மக்காவாசிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நபி நாயகம் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது.

பெருமானைப் பற்றி நிந்தனையும் பழியுமே பேசிய மக்கா வாசிகள், துபைல் இப்னு அம்ரு என்ற அந்தப் பெரியவரிடம் வேறு ஒரு செய்தியும் கூறினர். பெருமானிடம் ஒரு முறை பேசியவர்கள், ஏதோ மந்திர சக்தியால் ஈர்க்கப்பட்டு தாய் தந்தையரைக் கூட மதிக்காத பாதகர்களாகி விடுகின்றனர் என்று கூறினர்.

குறைஷிகள் கூறிய குற்றச் சாட்டுகளையெல்லாம் கேட்டறிந்த துபைல் என்பவர் பெருமானிடம் மிகுந்த வெறுப்புக் கொண்டார். அவர் முகத்தைப் பார்க்கவும் அவர் பேச்சைக் கேட்கவும் விரும்பாதவராயினார். நாயகமவர்கள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும் வழியாக அவர் போக நேரிட்டால், முன்னெச்சரிக்கை யாகக் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு போவது வழக்கம்.

ஒரு நாள் துபைல் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த பாதையாய்ச் சென்றார். அன்று நாயகத்தின் குரல் இஸ்லாத்தின் முழக்கம்போல் பெரிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. துபைல் பஞ்சு வைத்திருந்தார்.