பக்கம்:நாயகர் பெருமான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

11. இருட்டுக் குகையில் இறைவனும் இருந்தான்

பெருமானவர்கள் நபியாகிப் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கியது. இறைவன் அவ்வாண்டில் மதினாவிற்குப் போகும்படி கட்டளை பிறப்பித்தான். இக் கட்டளை பிறந்ததும், பெருமான் அவர்கள் ஹஸரத் அபூபக்கர் அவர்களின் வீட்டுக்குச் சென்று செய்தியை அறிவித்தார்கள். அவரும் பெருமானுடன் வருவதாகக் கேட்டுக் கொண்டார். நபி அவர்களும் சம்மதித்தார்கள்.

இந்நிகழ்ச்சி நடந்த இரு நாட்களுக்குப் பின்னர், அபூஜாஹில்லின் யோசனைப்படி அரபியர்கள், பெருமானைக் கொல்வற்காக இரவில் அவர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அரபிகளிடையே ஒரு பழக்கம் இருந்தது. வீரர்கள் பெண்கள் வசிக்கும் வீடுகளுக்குள்ளே புகுந்து கலகம் விளைப்பதில்லை. எனவே, பெருமானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரட்டும் என்று காத்திருந்தனர்.

பெருமான் தம் உயிருக்காக அஞ்சவில்லை. ஆனால், பெரும்பாலோர் நம்பிக் கொடுத்த பொருள் கள் அவர்களிடம் இருந்தன. அவற்றை யெல்லாம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்று கருதினார்கள். அதற்காக ஹஸரத் அலியவர்களைத் தம் வீட்டில்