பக்கம்:நாயகர் பெருமான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

15. “ஆளானோம் தங்களுக்கே ஐயா!”

பெருமானவர்களின் மீது தொடக்க காலத்து முஸ்லிம்கள் எவ்வளவு உண்மையான அன்பு கொண்டிருந்தார்கள் என்பதைக் கீழ்க்கண்ட நிகழ்ச்சி விளக்கும். உஹத் சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரிகளின் தாக்குதல் பலமாக இருந்தது. முஸ்லிம்களின் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகமாயிருந்தது. இடையில் பெருமான் அவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டதாகப் புரளி வேறு கிளப்பிவிடப்பட்டிருந்தது. இதனால், சில முஸ்லிம்கள் போர்க்களத்திலிருந்து பின்வாங்கி மதினாவிற்குத் திரும்பினர்.

அப்படித் திரும்பி வந்தவர்களை நோக்கி, வீட்டில் இருந்த பெண்கள், நபிபெருமானை விட்டு விட்டுத் திரும்பி வந்ததற்காக இடித்துரைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள், பெருமானவர்களின் நிலையை நேரில் அறிந்து கொள்வற்காகப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

பெருமானவர்களின் நலத்தை விசாரித்துக் கொண்டு சென்ற பெண்களிலே அன்சாரி குலத்தைச் சேர்ந்தவள் ஒருத்தி. போர்க் களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சிலர் அவளை வழியில் சந்தித்தனர். அவளைக் கண்டவுடன் அவர்கள் துயரத்துடன், அம்மா, உன் தந்தை சண்டையில் உயிர்

-4-