பக்கம்:நாயகர் பெருமான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

17. வரும்படி யன்று; வாளே கொடுப்போம்!

குறைஷிகள், யூதர்களையும், அவர்களுடன் நட்புப் பூண்டிருந்த பல கூட்டத்தார்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களுடைய சேனையில் 24,000 வீரர்கள் இருந்தனர். அவர்களை எதிர்த்து நிற்க முஸ்லிம்களிடம் இருந்த சேனையின் எண்ணிக்கை 3000 தான். எனவே மதினா நகரின் பாதுகாப்பற்ற திசையில் அகழ் ஒன்று வெட்டுவதென முடிவு செய்தனர். பரந்த வெளியில் நின்று கொண்டு எதிரிகளின் பெரும்படையோடு பொருதி மீள முடியாதென்ற எண்ணத்தில்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிரிகள் மதீனா நகரைச் சுற்றி வளைத்து முற்றுகை யிட்டார்கள். முஸ்லிம்கள், நகருக்குள் அகழுக்குப் பின்னால் இருந்து கொண்டு, அகழைத் தாண்டி எதிரிகள் உள் நுழையாதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.

முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது. இதனால் அன்சாரி வகுப்பினர் மனம் தளர்ந்து போகக் கூடுமோ என்று பெருமானவர்கள் ஐயுற்றார்கள். எனவே அவர்களுக்கு ஊக்கம் ஊட்டுவதற்காகவேனும் எதிரிகளில் ஒரு கூட்டத்தாருடன் சமாதானம் செய்து கொள்ளலாமா என்று நினைத்தார்கள். கத்பான் என்ற பிரி-