பக்கம்:நாயகர் பெருமான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அடைந்த யூதர்கள், முஸ்லிம்களுக்குத் திறை கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்கள். இவ்வாறு ஒப்பந்தம் நடந்து முடிந்து அமைதி நிலவிய வேளையிலும் சில யூதர்கள் தங்கள் குறும்புச் செயல்களை விடவில்லை.

ஸைனப் என்ற ஓர் யூதப்பெண், பெருமானவர் களையும் அவருடன் சில ஸஹாபாக்களையும் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தாள். சூதுமிக்க அந்த மங்கை உணவில் நஞ்சிட்டுப் பெருமானையும் அவர் தம் தோழர்களையும் கொன்று விடும் எண்ணத்துடனேயே விருந்துக்கு அழைத்திருந்தாள். பெருமான் அவர்களும் தம் தோழர்களுடன் சென்று விருந்துண்ண அமர்ந்திருந்தார்கள்.

ஒரு பிடி உணவை வாயில் அள்ளிப் போட்டவுடனேயே பெருமானவர்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். மற்ற ஸஹாபாக்களும் அவ்வாறே உண்பதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் ‘பாஷர்’ என்ற ஒரு ஸஹாபா மட்டும் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதால் நஞ்சின் கொடுமையால் உயிர் துறந்தார்.

பெருமான் அவர்கள் ஸைனப் என்னும் அப் பெண்ணை அழைத்துக் கேட்டார்கள். அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அவள் கூட இருந்த யூதர்கள், அவளைக் காப்பாற்றுவதற்காகத் தந்திரமாகப் பேசத் தொடங்கினார்கள்.

“ஐயா, தங்களைச் சோதிப்பதற்காகவே நாங்கள் உணவில் நஞ்சு கலக்க ஏற்பாடு செய்தோம்.