பக்கம்:நாயகர் பெருமான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உபைக்காக மரணப் பிரார்த்தனை செய்த அன்றைய தினம் பெருமானின் அருள் உள்ளத்தை உணர்ந்து ஆயிரம் முனாபிக்கீன்கள் உண்மையான முஸ்லிம்கள் ஆனார்கள்.

28. காப்பவன் இறைவனே

ஒரு சண்டை முடிந்து பெருமான் அவர்கள் திரும்பிவந்து கொண்டிருந்தார்கள், வழியில் களைப்பாறிச் செல்ல எண்ணினார்கள். தங்கள் வாளை ஒரு மரத்தின் கிளையில் தொங்கவிட்டுவிட்டு அதன் அடியில் படுத்தார்கள். களைப்பின் மிகுதியால் அவர்கள் தூங்கி விட்டார்கள்.

பகைவர்களில் ஒருவன் அவ்வழியாக வந்தான். நபிபெருமான் தூங்குவதைக் கண்டு அவர்கள் அருகில் வந்தான். மரக்கிளையில் தொங்கிய வாளை அவன் எடுத்துக் கொண்டான். அப்போது திடுமென்று பெருமான் அவர்கள் விழித்துக் கொண்டார்கள். அந்தப் பகைவன் அவர்களின் தலைப்பக்கத்தில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தான்.

விழித்தெழுந்த பெருமானை நோக்கி அவன் கேட்டான்.

“முஹம்மது! இப்போது என்னிடமிருந்து உம்மை யார் காப்பாற்றுவார்?”

உரத்த குரலில் அவன் கேட்ட கேள்விக்கு, பெருமான் அவர்கள் அமைதியாகப் பதில் சொன்னார்கள்.