பக்கம்:நாயகர் பெருமான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

யாரே காப்பார்?

சண்டை ஒன்று முடிந்தவுடன்
தனியாய்ப் பெருமான் வரும் வழியில்
கொண்ட களைப்பு நீங்கிடவே
குளிர்ந்த நிழலில் தங்கினரே.

போர்வா ளதனை மரக்கிளையில்
பொருத்தி வைத்தே பெருமானார்
சோர்வு நீங்கிக் கண்ணயர்ந்து
துயில லானார் மரத்தடியில்.

பகைவன் ஒருவன் தற்செயலாய்ப்
பார்த்தான் பெருமான் துரங்குவதை
மிகவும் மகிழ்ச்சி கொண்டவனாய்
மெதுவாய் அருகில் வந்தனனே.

ஏதோ ஓசை கேட்டதனால்
எழுந்த பெருமான் தலைமாட்டில்
சூதாம் எண்ணம் கொண்டவனாய்த்
தோன்றி நின்றோன் தனைக்கண்டார்.

பெருமா னுடைய வாளதனைப்
பிடித்து நின்ற அம்மனிதன்
“அருமை நபியே, இந்நேரம்
யாரே காப்பார் உமை?” யென்றான்.

“அல்லா!” வென்றார்; அம்மொழியில்
அடங்கி யிருந்த தென்கொல்லோ!
பொல்லா மனிதன் நடுநடுங்கிப்
போட்டு விட்டான் வாளதனை.