பக்கம்:நாயகர் பெருமான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

விழுந்த வாளை எடுத்தந்த
விந்தைப் பெருமான் தீயோனை
அழுந்த நோக்கி “உனைக்காப்பார்
யாரே?” என்று கேட்டாரே.

“யாரும் இல்லை உமையல்லால்
ஐயா” என்று பயத்தாலே
தீரும் நிலையில் உள்ளவனைத்
திருவார் நபிகள் கண்டாரே.

“அருளும் நாயன் தயவாலே
அன்பா உனை நான் மன்னித்தேன்
இருளும் எண்ணம் விலக்கிடுவாய்
இனிது வாழ்வாய் செல்” லென்றார்.

கொல்ல வருவார் தமைக்கூடக்
குளிர்ந்த அருளால் மன்னிக்கும்
நல்ல உள்ளம் படைத்தவரே
நாயன் தூதர் அறிவீரே.