பக்கம்:நாராயணன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களுக்கு எடுத்துக் கூறுதல் தன் கடமை எனவும் அவன் எண்ணினான்.
ஆசிரியருக்கு நாராயணன்மேல் சிறிதும் கோபம் இல்லை.'பிழை செய்தல் பிள்ளைகளுக்கு இயல்புதானே !' என்று அவர் எண்ணினார். நாராயணன் உண்மையைச் சொல்லி விட்டதால் அவர் அவனே மன்னித்தே இருக்கலாம். அவ்வாறு மன்னிப்பதும் சில சமயங்களில் தீமையாக முடிகின்றது. அன்றியும், மற்ற மாம்பழங்களை அடித்து வீழ்த்திய செய்தி அவருக்கு இன்னமும் நன்றாக விளங்கவில்லை. மாணிக்கத்தின் மீது உபாத்தியாயருக்குச் சந்தேகம் தோன்றினாலும் உண்மையை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் அவனைத் தண்டிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆதலால் இவர்களை இன்னமும் நன் நன்றாக ஆராய வேண்டும் என எண்ணியே அவர் அவ்வாறு எல்லோருக்கும் இலேசாக அந்தத் தண்டனையைத் தந்தார்.

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/30&oldid=1340133" இலிருந்து மீள்விக்கப்பட்டது