பக்கம்:நாராயணன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கத்திருப்பதைக்கண்டான்.படிப்பில் கவனம் செலுத்தியிருந்ததால் மாணிக்கம் வந்ததையேனும், ஆசிரியர் வெளியே சென்றதையேனும் நாராயணன் கவனிக்கவேயில்லை.

மாணிக்கம் அங்கே வந்ததும் சிறிது நேரம் உலாவினான். அப்போது ஆசிரியர் இருக்கும் அறை திறந்து இருப்பதை அவன் கண்டான்.ஆதலால் அவன் மெதுவாகப் போய் அங்கே எட்டிப் பார்த்தன்.அவ்வறையில் ஒருவரும் இல்லை. ஆசிரியர் கைக் கடிகாராமும், பவுன்டன் பேனாவும் மேசையின் மீது இருப்பதை அவன் கண்டான். அப்போது மாணிக்கத்திற்கு ஓர் எண்ணம் பிறந்தது."இந்தப் பேனாவை எடுத்து நாராயணன்  சட்டைப் பையில் எப்படியாவது 

போட்டுவிட்டால் அவனைத் திருடனாக்கலாம்",என்று அவன் எண்ணினான்.ஆதலால் மாணிக்கம் வேகமாக உள்ளே நுழைன்தான்.அப்போது அவனுக்குக் கடிகாரத்தின் மீதும் எண்ணம் சென்றது. செல்லவே அவன் அவ் விரண்டையும்

            30
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/33&oldid=1339793" இலிருந்து மீள்விக்கப்பட்டது