பக்கம்:நாராயணன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 பாடசாலை மணி அடித்தது. ஆசிரியரும்

வகுப்பில் வந்து உட்கார்ந்தார். பேனாவும், கடிகாரமும் காணுமற் போனது அவருக்குப் பெரிதும் ஆச்சரியத்தையே விளைவித்தது. தாம் அறையைப் பூட்ட மறந்தது பிழையாக இருப்பினு இத்தகைய திருடு நிகழுமென்று அவர் கனவிலும் எண்ணவில்லை. அன்றியும், "ஆசிரியர் அறையிலேயே திருடியவன் கைதேர்ந்த கள்ளனாக இருத்தல் வேண்டும்", என்றும் அவர் எண்ணினர். "இத்தகைய துணிவான செய்கையைச் செய்தவன் யாவன்!" என்று அவர் நெடுநேரம் எண்ணிப் பார்த்தார்.தாம் வெளியே சென்ற போது பாடசாலையில் இருந்தவன் யாவன் என்று அவர் நினைத்துப் பார்த்தார். அப்போது அங்கே இருந்தவன் நாராயணன் ஒருவனே என்பது அவர் நினைவிற்கு வந்தது. "ஆ-அவனா 
            33
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/36&oldid=1340202" இலிருந்து மீள்விக்கப்பட்டது