பக்கம்:நாராயணன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றும் தோன்றாமல் திகைத்திருந்தனர்.மாணிக்கமோ நாராயணனை ஒரு முறைபார்த்தான் ; பிறகு ஆசிரியரைப் பார்த்தான் ; முடிவில் தலை குனிந்து கொண்டான்.திருட்டுவிழி அவனுக்கு வர-வர அதிகப்பட்டுக் கொண்டே வந்தது.அன்றியும் ஆசிரியர், "போலீஸ்"என்னும் வார்த்தையைச் சொன்ன போது அவன் உள்ளம் திடுக்கிட்டது. ஆதலால், அந்த ஆசிரியருக்கு மாணிக்கத்தின் மீதே சந்தேகம் அதிகரித்தது.

அவர் அவ்வளவு கூறியும், எடுத்தவன் அவைகளைக் கொண்டுவந்து கொடுக்கவோ, அல்லது 'நான்தான் எடுத்தேன், என்று சொல்லவோ முன் வரவில்லை. ஆதலால் அவர் சிறிது நேரம் ஏதோ எண்ணத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு மாணிக்கத்தின் மீது சந்தேகம் மிகுதியாக இருந்தாலும் யாதொரு காரணமும் இல்லாமல் அவனைத் திருடன் என்று எவ்வாறு சொல்லுவது என அவர் எண்ணினர். ஏனெனில் சிலர் அச்சத்தினலோ, வேறு

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/40&oldid=1338897" இலிருந்து மீள்விக்கப்பட்டது