பக்கம்:நாராயணன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வில்லை. அவர், களவுபோன நிகழ்ச்சியைக்குறித்து ஏதேதோ நெடுநேரம் எண்ணிப் பார்த்தார். கைக்கடிகாரத்தை எடுத்தவன் என்ன செய்திருப்பான் என அவர் நினைத்துப் பார்த்தார்; மற்றுமோர்முறை அந்தப் பாடசாலை முழுவதும் தேடினர். பிறகு அவர் பாடசாலையைச் சுற்றியுள்ள இடத்தையும் ஒரு முறை சுற்றி வந்தார். கடிகாரம் களவு போனதைக் குறித்துக்கூட அவர் அவ்வளவு வருந்தவில்லை. அதைக் களவு செய்தவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஆதலால், அன்று இரவு மணி ஏழாகியும் அவர் பாடசாலையை விட்டுப் போகாமலே இருந்து
விட்டார்.
ஏறக்குறைய எட்டடிக்கும் சமயம். அன்று நிலவு பால்போல் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தும் பாடசாலை மட்டில் இருட்டாகவே இருந்தது. ஆசிரியர் அன்று அதுவரையில், 'விளக்கு ஏற்றவேண்டுமே,' என்பதையும் மறந்து இருந்தார். அப்போது பாடசாலையின்

50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/53&oldid=1340264" இலிருந்து மீள்விக்கப்பட்டது