பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாற்பெரும் புலவர்கள் அவன் மிகுந்த சீற்றமும் வீரமும் வாய்ந்தவன்; கூற்றுவனை விட மிக்க வலிமையுடையவன்; இளம் பிராயத்திலிருந்தே பலரை வென்று வெற்றியை நிலை நாட்டியவன்; சேரனையும் பாண்டியனை யும் வெண்ணி என்ற ஊரில் ஒருங்கே சிதற அடித். தவன்; மான் கூட்டத்திற் புலி பாய்ந்தாற் போன்று பகையரசர்கள் சேனையில் புகுந்து அல்லல் விளைத்தவன். இவ்வேந்தன் சோழ நாட்டிற். கருகே இருந்த நாடுகளைக் கைப்பற்றினதும் போரில் விருப்பங்கொண்டு வட திசையை நோக்கிச் சென்றான்; அங்ங்ணம் செல்கையில் இமயமல்ை குறுக்கிட்டுத் தடுத்தமையின், என். விருப்பத்தை இம்மலை தடுத்தது என்று கூறி, முனிவுடன் அதன்மேல் தனது புலிக்கொடியை நாட்டி மீண்டான். இங்ங்னம் வெற்றியோடு திரும்பிய கரிகாலன் இலங்கை மீது படை எடுத்துச் சென்று, கடும்போர் விளைத்து.அதனையும் தனதாட்சிக்கு உட்படுத்திக் கொண்டான். சோழர் பெருமான் கொடையிற். சிறந்த வள்ளல்; பட்டினப் பாலையால் தன்னைப் பாடிய உருத்திரங் கண்ணனார் என்ற புலவருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தவன். சோணாட்டுக் குடிகள் அவன் காலத்தில் இன்பமே அன்றித் துன்பமென்பதனை அறிந்திலர். ச்ோழ பாண்டியர் - இங்ங்னம் இருக்கையில் சேரநாட்டைச் சேரன்-செங்குட்டுவன் என்பவன்,