பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார். 11 அரசாண்டு வந்தனன். அவனுக்குத் தம்பியாவார். இளங்கோவடிகள் என்னுந் துறவியார். செங்குட்டு. வன் மிக்க இளம் பிராயத்திலேயே அரியணை ஏறினான். பல அரிய போர்ச் செயல்களைச்செய்து வெற்றி பெற்றான்; இமயத்தினின்றும் சிலை கொணர்ந்து தாயின் வடிவம் செய்து வைத்தான். அப்போது, தன்னை எதிர்த்த ஆரிய மன்னர்களை எளிதில் வென்று மீண்டான்; நிலத்தானையும் கடற்றானையும் பெற்றிருந்தான். அவனது மனைவி,அறிவிலும் உருவிலும் ஆலோசனையிலும் சிறந்து விளங்கிய இளங்கோ வேண்மான் என்பவள். அவள் அரசனோடு கொலுமண்டபத்தில் வீற்றி" ருந்து அவ்வப்போது தன் ஆலோசனையைக் கூறுவது வழக்கம். அக்காலத்திலே செங்குட்டுவன் தன் மனைவிக்கு அத்துணை உரிமை அளித்திருந் , தான். இனி, இவ்வரசர்கள் வரலாற்றை இவ்வளவில் நிறுத்தி, சாத்தனார் எவ்வாறு இவர்களோடு சம்பந்தப்பட்டனர் என்பதை அறிவோம். வீர பத்தினி வரலாறு. சாத்தனார் மதுரையம்பதியில் சங்கப் புலவரா யிருந்த காலத்தில் தமிழ்நாடு மூன்றிற்கும் சம்பந்த, மான நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியின் வரலாற்றைக் கூறி, அத்துடன் சாத்தனார் சம்பந். தப்பட்டதையும் கூறுவோம்.