பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாற்பெரும் புலவர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் மாசாத்துவான், மாநாய்கன் என்ற வணிகப் பெருமக்கள் வாழ்ந்த னர். மாசாத்துவான் மகனான கோவலனுக்கும். மாநாய்கன் மகளான கண்ணகிக்கும் மணம் நடத்' தது. கோவலனும் கண்ணகியும் தனித்து இல்லறம் தடத்தினார்கள். கண்ணகியின் நற்குண நற்செயல் களைக் கண்டு மகிழ்ந்த கோவலன் அவளை, .” 'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! அரும்பெறற் பாவாய் ஆருயிர் மாந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே! என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? பாழிடைப் பிறவா இசையே! என்கோ? தாழிருங் கூந்தல் தையால்: நின்னை' என்று, பலவாறு புகழ்ந்து போற்றலானான். இங்ங்னம் இருக்கும் நாட்களில் கோவலன் மிக்க அழகுடையவளும், சோழன் கரிகாலனால் பரிசளிக்கப்பட்டவளும், ஆடல் பாடல்களில் தேர்ச்சியுற்றவளும் ஆன மாதவி என்னும் நாடகக் க்ணிகையை விரும்பித் தன்னிடமிருந்த பொருள் களை எல்லாம் இழந்தான்; சில காலம் அம்மாதவி யோடு இன்புற்று இருந்தான். அதுசமயம் கணவன் பிரிவாற்றாது, கண்ணகி துன்புற்றிருந்தாள். அவ் ஆரில் ஆண்டுதோறும் இந்திர விழா நடப்பது வழக்கமாயிருந்தது. அவ்வருடம் அவ்விழாவின .