பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார் 15 வருந்துவதை அவனால் அறிந்து மிக வருந்தினான். தான் செல்லும் வரலாற்றை அந்தணருக்குக் கூறி அவனை அனுப்பி மீண்டான். பின்னர்க் கோவலன் கண்ணகியையும் கவுந்தி அடிகளையும் அழைத்துக் கொண்டு சென்று வைகை யாற்றை அடைந்தான்; அதனைத் தொழுது புணையேறி அக்கரையை அடைந்து மதுரையின் மதிப்புறத்தாகிய முனிவர் ஆச்சிரமத்தே தங்கினான். - மறுநாள் கோவலன் தனியே புறப்பட்டு மதுரைக்குள் சென்றான். அவன் அம்மாநகரத் தின் வளப்பத்தைக் கண்ணுற்று மீண்டான். அப்போது மாதரி என்ற இடைச்சியர் தலைவி ஆச்சிரமத்திற்கு வந்தாள். கவுந்தி அடிகள், கோவலனையும் கண்ணகியையும் மாதரியிடம் அடைக்கலமாக விட்டார் மாதரி, கணவனுக்கும் மனைவிக்கும் குறைவின்றி அன்னம் படைத்தாள். கோவலன் கண்ணகியின் சிலம்பொன்றை கையி லேந்தி அதனை விற்றற்பொருட்டு மதுரைக்குள் நுழைந்தான்; நுழைந்து, கடைவீதி வழியாய்ச் செல்லுகையில், பலர் பின்னே வரப் பொற்கொல் லன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். கோவலன் அவனிடம் தன் சிலம்பைக் காட்டினான். சிலம்பைக் கண்ணுற்ற பொற்கொல்லன், "ஐய, இச்சிலம்பு எம் அரசியே அணியத் தக்கது." யான் சென்று அரசனுக்குத் தெரிவித்து வருமளவும் நீ இங்கிரு” என்று கூறி, அரண்மனை நோக்கி நடந்தான். நடந்து சென்ற அவன் தனக்குள்ளே,