பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார் 17. மனம் வேறாகுமாறு களவு நூலில் உள்ள பல ஏதுக்களை அவர்கட்குக் காட்டினன். அதன் மேல் கொலைக்கஞ்சான் ஒருவன் விரைந்து சென்று, கோவலனைத் தன் வாள்ால் வெட்டி வீழ்த்தி னான். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கண்ணகி உணர்ந்தாள். அவள் அறிவு கலங்கி, அழுதரற்றி ஓடினாள்: "கதிர்ச் செல்வனே! நீ அறிய என் கணவன் கள்வனோ?" என்றாள். அவன், "அம்மே! நின் கணவன் கள் வனல்லன்; அவனைக் கள்வனென்ற இவ்வூரை விரைவில் எரியுண்ணும்” என்றான். அப்பால், கண்ணகி மதுரையுள் நுழைந்து, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக்கண்டு, அவனுடலைப் போய்த் தழுவினாள். அவ்வளவில், கோவலன் உயிர் பெற்றெழுந்து, "மதி போன்ற முகம் வாடியதே' என்று சொல்லிக் கையாலே அவள் கண்ணிரை மாற்றினன். கண்ணகி புலம்பிய வளாய் அவனுடைய பாதங்களை இரு கைகளா லும் பூண்டு கொண்டு பணிந்தாள். உடனே அவன் கண்ணகி, நீ இங்கிருக்க' என்று கூறி விட்டுச் சுவர்க்கம் புக்கான். - - பின்னர்க் கண்ணகி தலைவிரி கோலமாய்ப் பாண்டியன் முன்னர்ச் சென்று நின்றாள்; தன் வழக்கை உரைத்தாள்; தனது மற்றொரு சிலம்பை உடைத்து அதனுள் இருந்த மாணிக்கப் பரலைக் காண்பித்தாள். அரசபத்தினியின் சிலம்பினுள் நா-2 - -