பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார் I9 போது கண்ணகி வெள்ளியம்பலத்தின் அருகே நின்று கொண்டிருந்தான். எனவே, கண்ணகி யிடம் மதுரைமா தெய்வம் சென்று பேசிய வற்றைச் சாத்தனார் உற்றுக் கேட்டுக்கொண்டி ருந்தனர். மதுரைமா தெய்வம் கண்ணகியை நோக்கி, அம்மா! உனக்கு ஒன்று சொல்ல வந்தேன். இப். பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றமுடையவன் அல்லன். நீ, முற்பிறப்பில் சிங்கபுரத்துக் கடை வீதியில் இருந்த பரதன் என்பவனின் மனைவியா யிருந்தனை. பரதன் இப்பிறப்பில் கோவலனாகப் பிறந்தான். அவன் சங்கமன் என்பான் மீது பொறாமை கொண்டு, அவன் பகையரசனின் ஒற்றன் எனத் தன் அரசனிடங் கூறி, அவனைக் கொல்வித்தான். அச் சங்கமனே இப்பிறப்பில் பொற்கொல்லனாகப் பிறந்தான். சங்கமன் மனைவி, கணவன் பிரிவாற்றாது பதிநான்கு தாள் வருந்தி, பின்னர்த் தன் உயிரை விடத் துணித் தவள் ஒரு மலைமீதேறி, எமக்குத் துன்பம் செய் தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவா ராக் எனச் சாபமிட்டிருந்தாள். அச்சாபமே உங்களைத் தொடர்ந்து வருத்தியது. நீ, இன் றைக்குப் பதிநான்காவது தினத்தின் பகல் சென்ற பின்பு உனது கணவனைக் கண்டு சேர்வாய்' என்று கூறி மறைந்தது. தெய்வம் சென்ற பின்னர், கண்ணகி மதுரை அயினின்றும் நீங்கி, வையைக் கரை வழியே சென்