பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாற்பெரும் புலவர்கள் றனள், சென்று சேரநாட்டை அடைந்தாள்; சேர நாட்டில் திருச்செங்குன்றம் என்ற மலைமீதேறி ஒரு வேங்கை மர நிழலில் நின்றாள். அப்போது அங்கு வானுலகினின்றும் விமானம் ஒன்று இறங்கி யது. அதில் கோவலன் வீற்றிருந்தான். கண்ணகி விமானத்திலேறிக் கணவனோடமர்ந்தாள். விமா னம் விண்ணுலகடைந்தது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெள்ளி அம்பலத்திலிருந்து கண்ணகி வர லாற்றைக் கேட்டுணர்ந்த சாத்தனார் மீண்டும் கண்ண்கியின் செயலை ஆராய விருப்பங் கொண் டனரோ அன்றி, சேரமன்னனான செங்குட்டு: வனைக் காண விழைவு கொண்டனரோ, யாதோ, அறியோம். அவர் கண்ணகி சென்ற சேரநாட்டை அடைந்தார்; சேரன் செங்குட்டுவனைக் கண்டார். சேரர் பெருமான் புலவர் பெருமானை நன்கறிவா னாதலின், அவரை வரவேற்று, அளவளாவிக். கொண்டிருந்தான். சாத்தனார் அவனோடு சில நாட்கள் தங்கியிருந்தனர். நிற்க, வீர பத்தினியான கண்ணகி வேங்கைமரா நிழலினின்றும் விண்ணுலகெய்திய அற்புதக் காட் சியை ஆண்டிருந்த குன்றக் குறவர்கள் கண்டு ஆச் சரிய முற்றனர். அவர்கள் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கொண்டாடினார்கள். தாங். கள் கண்ட காட்சியைச் சேரனுக்கு அறிவிக்க