பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார் 21 விரும்பினார்கள்; அரசனைக் காண கையுறைப் பொருள்களுடன் புறப்பட்டார்கள். - அவ்வேளையில் சேரமன்னன் வஞ்சிமா நகரி னிைன்றும் புறப்பட்டு மலைவளத்தினைக் காண விரும்பி, பெரியாற்றங்கரையின் மணலில் இனி தமர்ந்திருந்தான். அவனுடன் அவனது மனைவி இளங்கோ வேண்மான், சீத்தலைச் சாத்தனார், இளங்கோலடிகள் முதலானோரும் இருந்தார்கள். அப்போது குன்றக்குறவர்கள் தாங்கள் கொணர்ந்த யானைக்கோடும், அகிற் கட்டையும் மான் மயிர்க் கவிரியும், சந்தனக் கட்டையும், சித்துரக் கட்டியும், பழ வகைகளும் தந்து அரசனைக் கண்டு பணிந்து, "ஏழ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம் கான வேங்கைக் கீழோர் காரிகை தான்நகில் இழந்து தனித்துய ரெய்தி வானவர் போற்ற மன்னோடுங் கூடி வானகம் போற்ற வானகம் பெற்றனள்; எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ? நின்னாட் டியாங்கள் நினைப்பினு மறியேம்' என்றனர். குறவர் கூற்றைக் கேட்ட சேரன் வியப்புற்று ஒன்றுந் தோன்றாது திகைத்தான். அவ்வமயம் அருகே இருந்த தண்டமிழ்ச் சாத்தனார் அவனை நோக்கி, “அரசே, முன்பு நிகழ்ந்தவற்றை யான் அறிகுவன்' என்றுரைத்துக் கண்ணகி வரலாற்றை விரிவாகக் கூறினார். . . . .