பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாற்பெரும் புலவர்கள் ஒன்றைப் பெற்று அதன் உதவியால் பல ஏழை மக்களைக் காப்பாற்றி வந்தாள் பல புத்த முனிவர் களைத் தரிசித்து இறுதியில் நற்பேற்றைப் பெற்றாள். அம்மணிமேகலையின் சிறந்த வரலாற்றை முப்பது கதைகளாகப் பிரித்து. ஆசிரியர்-சீத்தலைச் சாத்தனார் ஒரு நூலியற்றி னார்; அந்நூலுக்குக் கதாநாயகியான மணிமேகலையினது நற்பெயரையே இட்டனர். எனவே, கோவலன், கண்ணகி என்போரது வரலாற்றைக் கூறுவது சிலப்பதிகாரம் என்னும் நூலாகும். மாதவி மகள் மணிமேகலை வர லாற்றை விரிப்பது மணிமேகலை என்னும் நூலா கும். முன்னது இளங்கோவடிகளாலும் பின்னது சாத்தனாராலும் பாடப்பட்டன. இவற்றுள் சிலப்பதிகாரம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் தழுவி நிற்கும் நுண்ணிய நூலாகும். மணிமேகலை என்பது வீடு பேற்றைத் தழுவி நிற்பதாகும். இவ்விரண்டும் தொடர்புடைய நூல்கள்; முன்னது தாய் தந்தை யரைப் பற்றியதும், பிற்பட்டது மகளைப் பற்றிய தும் ஆதலின், இவ்விரண்டு நூல்களும் ஐம் பெருங் காப்பியங்களில் சிறப்புப் பெற்ற இரண்டாம். இவை சங்க காலத்தில் இயற்றப்பட்டமையின், சங்க நூல் வரிசையில் வைக்கற்பாலன. இவற்றை ஒவ்வொரு தமிழரும் வாசித்தல் இன்றியமையாத தா.ம. -